அண்ணன்- தம்பி உள்பட 3 போலி டாக்டர்கள் கைது

வல்லம், திருக்காட்டுப்பள்ளியில் அண்ணன்- தம்பி உள்பட 3 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-09 18:35 GMT

வல்லம்:

வல்லம், திருக்காட்டுப்பள்ளியில் அண்ணன்- தம்பி உள்பட 3 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.

திடீர் சோதனை

தஞ்சை அருகே உள்ள வல்லத்தில் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து தஞ்சை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் திலகம் உத்தரவின் பேரில் வல்லம் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் அகிலன், டாக்டர் மோகன்ராஜ் மற்றும் வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சுகாதார அலுவலர்கள், போலீசார், அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வல்லம் கொட்டாரம் தெரு பகுதியில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

2 பேர் கைது

அப்போது மேற்கண்ட பகுதியில் உள்ள 2 கிளினிக்கில் 2 பேர் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்்தினர். விசாரணையில் அவர்கள் வல்லம் மின்நகரை சேர்ந்த ராமானுஜம் (வயது 70), கொட்டாரத்தெருவை சேர்ந்த ஜெயக்குமார் (53) ஆகியோர் என்பதும், மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து மருந்து வழங்கி வந்ததும் தெரியவந்தது. இது குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமானுஜம், ஜெயக்குமார் ஆகியோரை கைது செய்து தஞ்ைச கிளை சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ராமானுஜம், ஜெயக்குமார் ஆகியோர் சகோதரர்கள் ஆவர்.

திருக்காட்டுப்பள்ளி

திருக்காட்டுப்பள்ளி லயன் கரை பகுதியில் வசித்து வருபவர் ரத்தின் துரோநாத்பிஸ்வாஸ் (45). இவர் பழமார்நேரி சாலை பகுதியில் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு ஆங்கில முறை சிகிச்சை அளித்து வருவதாக புகார் வந்தது. இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர்(பொறுப்பு) லோகநாதன் புகார் கொடுத்தார். அதன்பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார், ரத்தின் துரோநாத்பிஸ்வாசிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர், மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரத்தின் துரோநாத்பிஸ்வாசை கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள போலி டாக்டர், ரத்தின் துரோநாத்பிஸ்வாஸ் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

மேலும் செய்திகள்