இடைநின்ற 3 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
வல்லம் கிராமத்தில் இடைநின்ற 3 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
சேத்துபட்டு
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் வட்டார வளமைய, மேற்பார்வையாளர் ராஜா, தெள்ளார் வட்டார வள மைய பார்வையாளர் ஜெயசீலன், ஒருங்கிணைப்பாளர் சரவணன் ராஜ், பயிற்றுனர்கள் இசையரசி, வல்லம் பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரேசன், பெரும்பாக்கம் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பெரணமல்லூர் ஒன்றியம், வல்லம், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது இடைநின்ற மணிகண்டன், பிபரசாந்த், பிரதாப் ஆகிய 3 மாணவர்களை கண்டறித்து மணிகண்டன், பிரசாந்த் ஆகிய 2 மாணவர்களை வல்லம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பிலும், பிரதாபை 7-ம் வகுப்பிலும் சேர்த்தனர்.