ரூ.3 கோடி மதிப்பிலான இடம் மீட்பு

நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான இடத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

Update: 2023-01-27 18:41 GMT


நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான இடத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

கோவிலுக்கு சொந்தமானது

நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 81 ஆயிரத்து 300 சதுர அடி இடம் நாகை நகராட்சி 1-வது வார்டில் உள்ளது. இந்த இடம் ஒருவருக்கு வாடகைக்கு விடப்பட்டு இருந்தது.

அவர் அந்த இடத்துக்கு முறையாக வாடகை செலுத்தாத காரணத்தால் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராமு, கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்க உத்தரவிட்டார்.

ரூ.3 கோடி இடம் மீட்பு

அதன்பேரில் உதவி ஆணையர் ராணி தலைமையில் செயல் அலுவலர் சீனிவாசன் மற்றும் கோவில் பணியாளர்கள் நேற்று கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்டனர். மீட்கப்பட்ட அந்த இடத்தின் மதிப்பு ரூ.3 கோடியாகும்.

இதேபோல் கோவிலுக்கு சொந்தமான இடத்தை பயன்படுத்துபவர்கள் முறையாக வாடகை செலுத்தாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்