போக்குவரத்து விதிமீறல்களுக்கு ரூ.3¾ கோடி அபராதம் வசூல்

போக்குவரத்து விதிமீறல்களுக்கு ரூ.3¾ கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.

Update: 2023-01-14 18:45 GMT

ஊட்டி, 

போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க, மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.1,000, மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் என விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராத தொகை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி நகரம், ஊட்டி ஊரகம், குன்னூர், கூடலூர், தேவலா ஆகிய 5 உட்கோட்டங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தி, விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் அதிகாரி கூறியதாவது:-

போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் அதிகரிக்கப்பட்ட பின்னர், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. மேலும் போக்குவரத்து போலீசார் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு 2,32,248 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.3,12,08,875 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் கடந்த ஆண்டு 1,96,195 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.3,86,98,600 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்