கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோத்தகிரி,
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள குஞ்சப்பனை சோதனைச்சாவடி பகுதியில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர்கள் 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். இதில் அவர்கள் 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கல்லூரி மாணவர்களான திருப்பூரை சேர்ந்த ஹரீஷ் (வயது 19), அஜய் குமார் (20), திருவள்ளூரை சேர்ந்த அத்வைத் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.