ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள்

சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள் பிறந்தது.

Update: 2023-05-30 18:45 GMT

சிவகங்கை

சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள் பிறந்தது.

3 ஆண் குழந்தைகள்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே வீரசோழன் கிராமத்தை சேர்ந்தவர் துரை முருகன். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 24.) இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் கர்ப்பிணியான மகேஸ்வரி, பிரசவத்திற்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 13-ந் தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஸ்கேன் செய்த டாக்டர்கள் வயிற்றில் 3 குழந்தைகள் இருப்பதை கண்டறிந்தனர்.

பின்னர் அறுவை சிகிச்சை செய்தனர். இதையடுத்து மகேஸ்வரிக்கு ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள் பிறந்தது.

அதே நேரம் குழந்தைகள் மூவரும் 1.5 முதல் 1.7 கிலோ மட்டுமே இருந்தது. மேலும் மூச்சு திணறலில் தவித்தது. இதையடுத்து குழந்தைகள் நலப்பிரிவு துறை தலைவர் ராஜ்குமார், உதவி பேராசிரியர்கள் வனிதா, பாலசுப்பிரமணியன், ஆகியோர் குழந்தைகளை இன்க்பேட்டரில்' வைத்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

தாய்-குழந்தைகள் நலம்

இந்நிலையில் உரிய சிகிச்சைக்கு பின் தாய் மகேஸ்வரியும், அவரது மூன்று குழந்தைகளும், மூச்சு திணறல் இன்றி, நல்ல நிலைக்கு வந்தனர். மேலும் அவரது தாயிடம் தடையின்றி தாய்ப்பால் பருகினர்.

இதையடுத்து தாய் மற்றும் 3 குழந்தைகளையும் நேற்று டீன் கே.சத்தியபாமா தலைமையில் நிலைய மருத்துவ அலுவலர் மகேந்திரன் உள்ளிட்டோர் சிகிச்சை முடித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்