அய்யப்ப பக்தர்கள் 3 பேர் காயம்

வடமதுரை அருகே சாலையோர பள்ளத்தில் கார் பாய்ந்து அய்யப்ப பக்தர்கள் 3 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-01-05 19:15 GMT


சேலம் அருகே உள்ள விவேகானந்தபுரத்தை சேர்ந்தவர் ஹரி (வயது 21). இவர், தனது தந்தை சந்திரசேகரன் மற்றும் உறவினர் ஒருவருடன் காரில் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர்கள், அங்கிருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை ஹரி ஓட்டினார்.


திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வடமதுரைைய அடுத்த தும்மலக்குண்டு பிரிவு அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த 3 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




Tags:    

மேலும் செய்திகள்