குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

பாவூர்சத்திரத்தில் குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-02 15:34 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் பகுதியில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த விஸ்வநாததாஸ் நகரைச் சேர்ந்த முத்தையா மகன் மாரியப்பன் (வயது 20), மேலப்பாவூரை சேர்ந்த மாரியப்பன் மகன் சரவணன் (20) மற்றும் பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த குறும்பலாப்பேரியைச் சேர்ந்த குமரேசன் மகன் சேர்மதுரை (28) ஆகிய 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு, தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் பரிந்துரைத்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ், 3 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அவரது உத்தரவுப்படி 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்