திருட்டு வழக்கில் 3 பேர் கைது

வாணியம்பாடி பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-21 17:29 GMT

வாணியம்பாடி பஸ் நிலையம், நேதாஜி நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் திருட்டு நடைபெற்று வந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதற்கு அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து அவர்களை டவுன்போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், சிக்னாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த காமேஷ் (வயது 24), வினோத் (25) என்பதும், நேதாஜி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மூன்று பவுன் நகை, பஸ்நிலையத்தில் மோட்டார்சைக்கிள் திருடியது தெரிய வந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவுசெய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பொருட்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்