இரிடியம் விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது

இரிடியம் விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-06-06 20:10 GMT

புதூர்

மதுரை அய்யர்பங்களா பகுதியை சேர்ந்தவர் பிரபு(வயது 40). இவர் கொடைக்கானலில் விடுதி நடத்தி வருகிறார். இவரை திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாலமாயன்(57), மணிகண்டன்(37) மற்றும் ஜெயராஜ்(46) ஆகியோர் தொடர்பு கொண்டனர். மேலும், தங்களிடம் அரியவகை இரிடியம் இருப்பதாக கூறினர். மேலும் அதற்கு ரூ.5 லட்சம் செலவாகும் எனவும் கூறியுள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த பிரபு இதுகுறித்து ஊமச்சிகுளம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் உதவியுடன் அவர்களை மதுரைக்கு வரவழைத்தார். அய்யர்பங்களா பகுதியில் வைத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சதுரங்க வேட்டை பட பாணியில், இரிடியம் இருப்பதாக கூறி நூதன முறையில் பலரிடம் இவர்கள் மோசடி செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பாலமாயன், மணிகண்டன், ஜெயராஜ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்