திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது
திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வையம்பட்டி:
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் பிலோமினாள்(வயது 65). சம்பவத்தன்று இவரது வீட்டின் ஓட்டை பிரித்து, அவர் சுருக்குப் பையில் வைத்திருந்த 13 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இது குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், இந்த திருட்டில் ஈடுபட்டதாக கேரள மாநிலம் கண்டலா பகுதியை சேர்ந்த ஆடர்ஸ் அச்சு(27), சிந்தா பவன் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்ற உன்னி (22) ஆகியோரை கைது செய்து, நகைகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கருங்குளம் பாலமேட்டில் திருட்டில் ஈடுபட்ட திண்டுக்கல் பேகம்பூர் சவேரியார்பாளையம் பகுதியை சேர்ந்த இஸ்மாயில்(38) என்ற ஆடு இஸ்மாயிலை வையம்பட்டி போலீசார் கைது செய்தனர்.