ரெயில்வே பொருட்களை திருடிய 3 பேர் கைது
ரெயில்வே பொருட்களை திருடிய 3 பேர் கைது
நாகையில் ரெயில்வே பொருட்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தீவிர கண்காணிப்பு
நாகை ரெயில் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள ெரயில்வே துறைக்கு சொந்தமான இரும்பு, செம்பு உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்து திருட்டு போவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்தனப்பேட்டை சிக்கல் இடையே ெரயில்வே இருப்பு பாதையில், இளைஞர்கள் 2 பேர் ரெயில்வே பொருட்களை எடுத்து கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
விசாரணையில் அவர்கள் 18 வயது சிறுவன், நாகை டாடா நகரை சேர்ந்த ரித்தீஸ் (வயது23) ஆகியோர் என்பதும், இவர்கள் ரெயில்வே துறைக்கு சொந்தமான பொருட்களை திருடி வந்ததும் தெரியவந்தது. பிடிபட்ட 2 பேர் கொடுத்த தகவலின் பேரில் வண்டிகார தெருவில் உள்ள பழைய இரும்பு கடையை சோதனை செய்தபோது, ரெயில்வே பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ெரயில்வே பொருட்களை சட்டவிரோதமாக வாங்கிய கடையின் உரிமையாளர் நாகராஜ் (45) மற்றும் திருட்டில் ஈடுபட்ட 18 வயது சிறுவன், ரித்தீஸ் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ெரயில்வே துறைக்கு சொந்தமான பொருட்களை பறிமுதல் செய்தனர்.