கிராவல் மண் அள்ளிய 3 பேர் கைது
சிவகாசி அருகே அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள மாரனேரி பி.திருவேங்கிடபுரத்தில் உள்ள ஓடையில் சிலர் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளுவதாக மாரனேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளிகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு சென்ற போது அங்கு அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 28), தமிழ்ச்செல்வம் (22), ஜெயவேல் (20) ஆகியோர் உரிய அனுமதியின்றி கிராவல் அள்ளியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். இதையடுத்து மணல் அள்ளும் வாகனம் மற்றும் 2 டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.