ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது

Update: 2022-07-09 21:37 GMT

நெல்லை மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி தலைமையில் களக்காடு பகுதியில் போலீசார் திடீர் வாகன சோதனை நடத்தினர். நாங்குநேரி -களக்காடு ரோட்டில் புதூர் சந்திப்பு பகுதியில் சோதனை நடத்தியபோது மினி லாரியில் 16 மூட்டைகளில் 640 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்த 2 பேர் சிக்கினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல திடியூரை சேர்ந்த மாரியப்பன் (வயது 37), முருகன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரேஷன் அரிசி மற்றும் ஒரு மினி லாரி, ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் களக்காடு- நாங்குநேரி மெயின் ரோட்டில் ஜே.ஜ.நகர் பகுதியில் வாகன சோதனை நடத்தியபோது ஒரு மினி லாரியில் 8 மூட்டைகளில் 400 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்ததை பிடித்தனர். இதுதொடர்பாக கடம்போடு வாழ்வு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சுந்தர் என்ற சுந்தரபாண்டியன் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரேஷன் அரிசி மற்றும் மினிலாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்