ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது

சுரண்டை, புளியங்குடி பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-13 19:26 GMT

நெல்லை:

நெல்லை மாவட்ட குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி தலைமையில் தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை மறித்து சோதனை செய்தபோது, அதில் 1,800 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக லோடு ஆட்ேடாவில் வந்த கீழப்பாவூரை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அரிசியுடன் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய புளியங்குடியை சேர்ந்த கங்காதரனை தேடி வருகிறார்கள்.

இதேபோல் புளியங்குடி பகுதியில் நடத்திய சோதனையில் ஒரு லாரியில் 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக புளியங்குடியை சேர்ந்த சுரேஷ், முருகானந்தம் ஆகியோரை போலீசார் கைது செய்து, ரேஷன் அரிசியுடன் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்