வெளிமாநில மது பாட்டில்களை கடத்தி வந்த 3 பேர் கைது
வெளிமாநில மது பாட்டில்களை கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வேலப்பன் செட்டிஏரி அருகே அரியலூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வெளிமாநில மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. பின்னர் விசாரணை செய்ததில் ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் (வயது 31), பிலிச்சிகுழி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (28), உடையார் பாளையத்தை சேர்ந்த அபுதாஹிர் (30) ஆகியோர் பாண்டிச்சேரி மாநிலத்தில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.