புகையிலை பொருட்களை விற்ற 3 பேர் கைது

புகையிலை பொருட்களை விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-16 18:49 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்- இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் கடைவீதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கழுமங்கலம் கிராமத்தை சேர்ந்த ரகுபதி (வயது 34), நாயகனைப்பிரியால் கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் (59) ஆகியோர் தங்களது பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜெயங்கொண்டம் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜூபிலி ரோட்டுத்தெருவை சேர்ந்த ஜாபர்அலி (41) என்பவர் தனது கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.6,360 மதிப்புள்ள 53 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்