புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
வீரபாண்டியில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்
வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பெட்டி கடையில் வைத்து புகையிலை விற்ற போடேந்திரபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி (வயது 35), மல்லைய கவுண்டன்பட்டி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த காளீஸ்வரன் (21) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது பெட்டிக்கடையில் புகையிலை விற்ற கோட்டூரை சேர்ந்த மனோஜ் குமார் (47) என்பவரை போலீசார் கைது செய்தனர்.