கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது
தொண்டி அருகே கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொண்டி,
தொண்டி அருகே உள்ள மண்மலகரை கண்மாய் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 136 கிலோ கஞ்சாவை தொண்டி போலீசார் கடந்த மாதம் 3-ந்தேதி அன்று கைப்பற்றினர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து இதில் தொடர்புடைய நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய புதுக்கோட்டை மாவட்டம் அரசங்கரை மணிகண்டன் (வயது 26), தேனி மாவட்டம் கம்பம் உத்தமபுரம் சிவனாண்டி (32), வெங்கடேசன் (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.