எடப்பாடி அருகேரேஷன் அரிசியை பதுக்கிய 3 பேர் கைது
எடப்பாடி அருகே ரேஷன் அரிசியை பதுக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்,
எடப்பாடி அருகே கண்ணியாம்பட்டி கருங்குளம் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு 17 மூட்டைகளில் 850 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக பதுக்கிய மல்லசமுத்திரம் பகுதியை சேர்ந்த சரவணன் (63), பாலசுப்பிரமணி (23), சந்தோஷ் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.