முதியவரை தாக்கி, கூரை கொட்டகைக்கு தீ வைத்த 3 பேர் கைது

பண்ருட்டி அருகே முன்விரோத தகராறில் முதியவரை தாக்கி, கூரை கொட்டகைக்கு தீ வைத்த 3 பேர் கைது

Update: 2023-05-14 18:45 GMT

பண்ருட்டி

பண்ருட்டி அருகே உள்ள தாழம்பட்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 73). இவருடைய குடும்பத்தினருக்கும், அதே ஊரை சேர்ந்த உறவினரான பூராசாமி என்பவருடைய குடும்பத்தினருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டு, முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கலியபெருமாள் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த பூராசாமியின் மகன்கள் பாலசுந்தரம் (50), ராஜசேகர் (44) மற்றும் ரவி மகன் கவுதம் (30) ஆகிய 3 பேர், கலியபெருமாளிடம் தகராறு செய்ததுடன், அவரை உருட்டுக்கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் அவர்கள் கலியபெருமாளின் வீட்டின் பின்பக்கம் உள்ள கூரை கொட்டகைக்கு தீ வைத்து விட்டு ஓடிவிட்டனர். இதில் கொட்டகை முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த கலியபெருமாள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைபாண்டியன் வழக்குப்பதிந்து, பாலசுந்தரம் உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்