பெண்ணை தாக்கிய 3 பேர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே பெண்ணை தாக்கிய 3 பேர் கைது
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வெள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மனைவி சுசீலா(வயது 45). இவர் வீட்டு வாசலில் தனது குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பாபுஜி(60), இவரது மனைவி கமலாபாய்(45), மகன் இளங்கோ(25) ஆகியோர் சேர்ந்து சுசீலாவையும், அவரது மகளையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுசீலா கொடுத்த புகாரின் பேரில் பாபுஜி உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.