3 ஏக்கர் அரசு நிலம் கணினி சிட்டாவில் முறைகேடாக பதிவேற்றம்

வந்தவாசியில் 3 ஏக்கர் அரசு நிலம் கணினி சிட்டாவில் முறைகேடாக பதிவேற்றம் செய்ததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-09 18:51 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சத்தியவாடி கிராம காட்டு காலனி பகுதி மக்கள் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், 'எங்கள் பகுதியில் உள்ள சுமார் 3 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை திருவிழா, பொங்கல் வைத்தல் போன்ற விழாக்களுக்காக நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலையில் அந்த நிலம் ஒருவர் பெயரில் கணினி சிட்டாவில் முறைகேடாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவா், அந்த நிலத்தை நாங்கள் பயன்படுத்துவதை தடுக்கிறார். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கணினி சிட்டாவை திருத்தம் செய்யக்கோரி நாங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்' என்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகா சம்பவ இடத்துக்கு வந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்