ரூ.3 கோடிக்கு 828 டன் காய்கனிகள் விற்பனை
மன்னார்குடி உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.3 கோடிக்கு 828 டன் காய்கனிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக உழவர் சந்தை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மன்னார்குடி:
மன்னார்குடி உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.3 கோடிக்கு 828 டன் காய்கனிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக உழவர் சந்தை அதிகாரி தெரிவித்துள்ளார்.
உழவர் சந்தை
மன்னார்குடியில் உழவர் சந்தை உள்ளது. காலை முதல் மதியம் வரை பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தையில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து காய்கறிகள் மற்றும் பல வகைகள் வாங்கி செல்கின்றனர். சிறப்பாக செயல்படும் உழவர் சந்தைகளில் மன்னார்குடி உழவர் சந்தையும் ஒன்று.இதுகுறித்து மன்னார்குடி உழவர் சந்தை நிர்வாக அலுவலரான வேளாண் அலுவலர் ரோஷன் சர்மிளா கூறியதாவது:-
828 டன் காய்கனிகள் விற்பனை
மன்னார்குடி உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.3 கோடியே 8 லட்சம் மதிப்பிலான 828 டன் காய்கனிகள் விற்பனையாகி உள்ளன. 1800 விவசாயிகள் உழவர் சந்தைக்கு வருகை புரிந்து தங்களின் விளைபொருட்களை விற்றுள்ளனர்.92 ஆயிரம் நுகர்வோர் உழவர் சந்தையின் மூலம் காய்கறி, பழங்களை வாங்கி பயன்அடைந்து உள்ளனர் என்றார்.