3 பாம்புகள் பிடிபட்டன
நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டையில் 3 பாம்புகள் பிடிபட்டன.
ஜோலார்பேட்டை அருகே புள்ளானேரி பகுதியில் வசித்துவருபவர் கஸ்தூரி. இவரது வீட்டின் எதிரில் பாம்பு இருப்பதை கண்டு, நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் நாட்டறம்பள்ளியை அடுத்த பி.பந்தாரப்பள்ளி பகுதியில் அம்பிகா என்பவரது வீட்டிற்குள் ஒரு பாம்பு நுழைந்தது. இதனை கண்ட அம்பிகா நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் வந்து 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பை பிடித்தனர்.
அதேபோன்று நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் சந்தோஷ் என்பவரது வீட்டின் அருகில் மலைப் பாம்பு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் சென்று 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.