தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 2-ம் பருவ பயிற்சி
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 2-ம் பருவ பயிற்சி நடந்தது.
தோகைமலை ஒன்றிய பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு 2-ம் பருவ பயிற்சி எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளி, கீழவெளியூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் தனித்தனியாக நடைபெற்றது. இதில், கொரோனா காலத்திற்கு பிறகு மாணவர்களின் கற்றல் நிலையை எவ்வாறு உயர்த்துவது? என்று மாயனூர் மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் பெலிட்டாவிமலா, பாலசுப்பிரமணியன், தோகைமலை வட்டார கல்வி அலுவலர் ராஜலட்சுமி, மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து ஆலோசனை வழங்கினர். மேலும் பயிற்சி நிறுவன முதல்வர் சுப்பிரமணியன், மாநில கல்வி பயிற்சி நிறுவன உதவி பேராசிரியர் மலர்கொடி ஆகியோர் பயிற்சியை ஆய்வு செய்தனர். இதில், 214 தொடக்க பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்