32-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்: நாளை நடக்கிறது

கரூர் மாவட்டத்தில் 32-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 1,677 மையங்களில் நாளை நடக்கிறது.

Update: 2022-07-23 18:31 GMT

1,677 மையங்கள்

கரூர் மாவட்டத்தில் 32-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) 1,677 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 12 வயது முதல் 14 வயதுடைய பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் 15 வயது முதல் 18 வயதுடையதடுப்பூசி செலுத்தியவர்களின் சதவீதம் குறைவாக உள்ளதால், அவர்களுக்கும் தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதால் இவ்வயதுடையவர்கள் இம்முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.

பூஸ்டர் தடுப்பூசி

மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே 75-வது சுதந்திர தினத்தையொட்டி கடந்த 15-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை 75 நாட்களுக்கு இலவசமாக செலுத்தி கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி 2-ம் தவணை தடுப்பூசி போட்ட தேதியிலிருந்து 9 மாத கால அவகாசத்திலிருந்து தற்போது 6 மாத கால அவகாசமாக குறைக்கப்பட்டுள்ளதால் இவர்களும் இத்தடுப்பூசி முகாமை பயன்படுத்தி பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.

போதிய ஒத்துழைப்பு

கரூர் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் மொத்தம் 43 ஆயிரத்து 447 பேரும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியுடையவர்கள் 5 லட்சத்து 68 ஆயிரத்து 757 பேரும் உள்ளனர். இவர்களும் இம்முகாமை பயன்படுத்தி கொள்ளலாம். கொரோனாவை வெல்வதற்கு தடுப்பூசி ஒன்றே ஒரே தீர்வு என்பதை உணர்ந்து தடுப்பூசி செலுத்தி, கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கரூர் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்