2-வது நாளாக வேலை நிறுத்தம்

Update: 2022-12-13 16:49 GMT


உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தொழிலாளர்கள் சம்பள நிலுவைத்தொகையை வழங்கக்கோரி நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சர்க்கரை ஆலை

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் உள்ளது அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை. இந்த ஆலை கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இந்த ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்குரிய சம்பளம் வழங்கப்படாமல் நிலுவை உள்ளது.

அத்துடன் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பி.எப். தொகையை ஆலை நிர்வாகம், கடந்த 25 மாதங்களாக பி.எப். அலுவலகத்தில் செலுத்தவில்லை. அதனால் கடந்த ஒரு வருடமாக, ஓய்வுபெற்ற 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காமல் உள்ளது.

2-வது நாளாக வேலை நிறுத்தம்

இந்த நிலை2-வது நாளாக வேலை நிறுத்தம்யில் சம்பள நிலுவைத்தொகையை வழங்கக்கோரியும், தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பி.எப்.தொகையை, பி.எப். அலுவலகத்திற்கு செலுத்தக்கோரியும் இந்த ஆலைத்தொழிலாளர்கள் நேற்றுமுன்தினம் தொடர் வேலை நிறுத்தத்தைதொடங்கியுள்ளனர். இதைத்ெதாடர்ந்து நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்தம் நடந்தது.

மேலும் செய்திகள்