மதுரையில் 2-வது நாளாக வெளுத்து வாங்கிய மழை

மதுரையில் 2-வது நாளாக வெளுத்து வாங்கிய மழை

Update: 2022-08-27 20:25 GMT


மதுரையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் மதுரை நகர் மற்றும் புற நகர் பகுதிகளில் மழை பெய்தது. இதனால் நேற்று காலையில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. அதனை தொடர்ந்து மாலை 5 மணி அளவில் மழை பெய்தது. இதனால் தாழ்வான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுபோல் நகரின் முக்கிய வீதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

மதுரை பெரியார் பஸ் நிலையம், எல்லீஸ்நகர் சாலை, காளவாசல், கோரிப்பாளையம், தல்லாகுளம், அண்ணாநகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. ஒரு சில இடங்களில் மின்சாரமும் தடைபட்டது.

பேரையூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை கனமழை பெய்தது. இதனால் பேரையூரில் 172 மில்லி மீட்டர் அளவு பதிவானது.

Tags:    

மேலும் செய்திகள்