சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 2-வது நாளாக தேர்வு

கோவையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 2-வது நாளாக தேர்வு நடைபெற்றது.

Update: 2023-08-28 00:45 GMT


கோவை


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 5,871 பேர் தேர்வு எழுதினார்கள். அதனைத்தொடர்ந்து நேற்று 2-வது நாளாக காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைகளில் பணியாற்றுபவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை எழுதினார்கள். கோவையில் 4 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.


இந்த தேர்வை எழுத 1,618 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் 1,237 பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள். 381 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுத வந்தவர்கள் சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.


கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் தேர்வு மையங்களுக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் பதிவு செய்யப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்