பஸ்சில் பெண்ணிடம் 29 பவுன் நகை திருட்டு
திசையன்விளையில் பஸ்சில் பெண்ணிடம் 29 பவுன் நகை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திசையன்விளை:
திசையன்விளையில் பஸ்சில் பெண்ணிடம் 29 பவுன் நகை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பஸ்சில் சென்ற பெண்
நெல்லை மாவட்டம் பரப்பாடி அருகே உள்ள ஆனைகுளத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி பேச்சியம்மாள் (வயது 40). இவர் சாத்தான்குளத்தில் நடைபெறும் தனது தம்பி திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பரப்பாடி பஸ் நிறுத்தத்தில் இருந்து திசையன்விளைக்கு பஸ் ஏறினார்.
திசையன்விளை வந்த பேச்சியம்மாள் அங்கு இருந்து சாத்தான்குளம் வழியாக திருச்செந்தூர் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்.
நகை திருட்டு
அப்போது, அவர் கொண்டு வந்த பையை பார்த்த போது, அதில் இருந்த மஞ்சள்பையை காணவில்லை. அதில் சுமார் 29 பவுன் தங்க நகை இருந்ததாகவும், அதை மர்மநபர்கள் திருடிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பேச்சியம்மாள் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்தார்.
மேலும் பஸ் நிலைய பகுதிகளில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.