சங்கரநாராயண சாமி கோவில் யானைக்கு 28-வது பிறந்த நாள்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவில் யானைக்கு 28-வது பிறந்த நாளையொட்டி கஜபூஜை, தீபாராதனை நடந்தது

Update: 2022-10-16 18:45 GMT

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் யானை உள்ளது. இந்த யானையை பக்தர்கள், `கோமதி' என்று அன்போடு அழைப்பார்கள்.

யானைக்கு நேற்று 28-வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி யானைக்கு பக்தர்கள் பழங்கள் வாங்கி கொடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

நேற்று இரவு கோவில் நிர்வாகம் சார்பில் யானை பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி யானைக்கு அதிக அளவில் பழங்கள் வாங்கி கொடுத்து கஜ பூஜை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இதில் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்