ரேஷன் அரிசி கடத்தியதாக 281 பேர் கைது

கோவையில் கடந்த 9 மாதங்களில் ரேஷன் அரிசி கடத்தியதாக 281 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-08 23:00 GMT


கோவையில் கடந்த 9 மாதங்களில் ரேஷன் அரிசி கடத்தியதாக 281 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

ரேஷன் அரிசி கடத்தல்

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை டி.ஜி.பி. வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் தமிழக-கேரள எல்லைகளான வாளையார், மீனாட்சிபுரம், கோபாலபுரம், வழுக்கல் உள்ளிட்ட இடங்களில் பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதுடன், வாகன தணிக்கையும் செய்தனர்.

281 பேர் கைது

இதனால் கோவையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றதாக கடந்த 9 மாதங்களில் 252 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 281 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 122 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 122 வாகனங்களை ஏலம் விட்டதில் ரூ.27 லட்சம் அரசிற்கு கிடைத்தது. இந்த தகவலை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்