தமிழகத்தில் புதிதாக 28 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2023-12-31 17:10 GMT

கோப்புப்படம்

சென்னை,

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா 4 ஆண்டுகளாகியும் இன்னும் உலகை விட்டு மறையவில்லை. அவ்வப்போது கொரோனா உருமாறி மிரட்டி வருகிறது. இந்தியாவில் கேரளாவில் உறுமாறிய கொரோனா பாதிப்பு வேகமாக பரவ தொடங்கியது. தொடர்ந்து கேரளா மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலும் பாதிப்பின் வேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு தற்போது இரட்டை இலக்கமாக பதிவாகி வருகிறது. இதுதொடர்பாக தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் இன்று 831 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 28 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சென்னையில் 16 பேர், செங்கல்பட்டில் 3 பேர், கோவை மற்றும் மதுரையில் தலா 2 பேர், நீலகிரி, திருவள்ளூர், கன்னயாகுமரி, திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இன்று கொரோனா பாதிப்பில் இருந்து 29 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 44 வயது பெண் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்