திருப்பூரில் 28 மில்லி மீட்டர் மழை பதிவு

திருப்பூரில் 28 மில்லி மீட்டர் மழை பதிவு

Update: 2022-10-18 12:46 GMT

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு திருப்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் வருமாறு:-

திருப்பூர் வடக்கு பகுதியில் 7 மில்லி மீட்டரும், அவினாசியில் 15 மில்லி மீட்டரும், பல்லடத்தில் 4 மில்லி மீட்டரும், ஊத்துக்குளியில் 3 மில்லி மீட்டரும், குண்டடத்தில் 18 மில்லி மீட்டரும், திருமூர்த்தி அணையில் 1 மில்லி மீட்டரும், அமராவதி அணையில் 14 மில்லி மீட்டரும், உடுமலையில் 19.20 மில்லி மீட்டரும், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் 24 மில்லி மீட்டரும், திருப்பூர் தெற்கு பகுதியில் 28 மில்லி மீட்டரும், கலெக்டர் முகாம் அலுவலகத்தில் 17.20 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

----

Tags:    

மேலும் செய்திகள்