பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் 28-ந்தேதி கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம்

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான குடும்ப நல நிரந்தர கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் 28-ந்தேதி தொடங்குகிறது.

Update: 2022-11-23 18:53 GMT

பெரம்பலூர் மாவட்ட குடும்ப நலத்துறையின் சார்பாக ஆண்களுக்கான நிரந்தர தழும்பில்லாத நவீன கருத்தடை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலான பிரசார வாகனத்தை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடும்ப நல நிரந்தர கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறை எளியது. தையல், தழும்பு, வலியின்றி ஒரு நிமிடங்களில் செய்யப்படும். அறுவை சிகிச்சை இல்லை. பாதுகாப்பானது. பக்கவிளைவுகள் இல்லை. மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், ஊக்கத்தொகையாக ரூ.1,100-ம் ஊக்குவிப்போருக்கு ரூ.200 அன்றே வழங்கப்படும், என்றார். இதற்கான விழிப்புணர்வு கையேடு மற்றும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகிப்பதற்காக கலெக்டர் வெளியிட குடும்ப நலத்துறை துணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் இளவரசன் பெற்றுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்