மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் எந்திரம்விண்ணப்பிக்க 27-ந் தேதி கடைசிநாள்
மாற்றுத்திறனாளிககள்மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் பெறுவதற்கு விண்ணப்பிக்க 27-ந் தேதி கடைசிநாள் ஆகும்.
கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மாற்றுத்திறனாளிகளின் சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2023-24-ம் நிதியாண்டிற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட உள்ளது. அதாவது கால்கள் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள், காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் மிதமான மனவளர்ச்சி குறையுடைய (75 சதவீதத்திற்கு கீழ்) மாற்றுத்திறனாளிகள், 75 சதவீதத்திற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குறையுடைய மாற்றுத்திறனாளி தாய்மார்கள், 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் தையல் பயிற்சி பெற்றிருப்பின் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
27-ந் தேதி கடைசி நாள்
மேலும் https://tnesevai.tn.gov.in/citizen/Registration.aspx என்ற இணையதள முகவரி மூலமாகவும் வருகிற 27-ந் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகி அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.