பெண்களிடம் 27 பவுன் நகை திருட்டு

கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் 27 பவுன் நகை திருட்டு

Update: 2023-06-28 18:45 GMT

பரமக்குடி

பரமக்குடியில் ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோவில், ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. அதில் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் கும்பாபிஷேகத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பரமக்குடி சவுகார் தெருவை சேர்ந்த லட்சுமணன் மனைவி கஸ்தூரி(வயது 74) கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் தங்க சங்கிலி, மீனாட்சி நகரைச் சேர்ந்த பூங்கொடி கழுத்தில் அணிந்திருந்த 12 தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து அவர்கள் பரமக்குடி நகர் மற்றும் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் நகையை திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்