27 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
பாவூர்சத்திரத்தில் 27 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர்
பாவூர்சத்திரம்
பாவூர்சத்திரத்தில் நெல்லை- தென்காசி நெடுஞ்சாலையில் கல்லூரணி விலக்கு அருகே, பாவூர்சத்திரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆரியங்காவூரை சேர்ந்த சங்கரையா மகன் ராமகிருஷ்ணன் (வயது 34), மைலப்பபுரத்தை சேர்ந்த ஆசீர்வாதம் மகன் தாசன் (42) ஆகியோரை போலீசார் சோதனை செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். 27 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
-