போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 2,681 பேர் எழுதினர்

நாகை மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 2,681 பேர் எழுதினர்.

Update: 2022-06-25 14:38 GMT

நாகை மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 2,681 பேர் எழுதினர்.

எழுத்துத்தேர்வு

தமிழகம் முழுவதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. அதன்படி நாகை மாவட்டத்தில் இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி, அமிர்தவித்யாலயா மெட்ரிக் பள்ளி ஆகிய மையங்களில் எழுத்துத்தேர்வு நடைபெற்றது. தேர்வர்கள் காலை முதலே ஆர்வமுடன் தேர்வு மையங்களுக்கு வந்தனர். அவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வர்கள் கைப்பை, புத்தகங்கள், செல்போன் மற்றும் கால்குலேட்டர், புளுடூத் உள்ளிட்ட சாதனங்களை தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

2,681 பேர் எழுதினர்

இதில் காலையில் பொதுஅறிவு மதியம் மொழித்தாள் (ஆங்கிலம், தமிழ்) ஆகிய தேர்வுகள் நடைபெற்றன.. நாகை மாவட்டத்தில் இந்த தேர்வுக்காக 3,352 பேர் விண்ணப்பித்தனர். இதில் 1,974 ஆண்களும், 707 பெண்கள் என மொத்தம் 2,681 பேர் தேர்வு எழுதினர். 671 பேர் தேர்வு எழுத வரவில்லை.

டி.ஐ.ஜி. ஆய்வு

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத்தேர்வை கண்காணிக்க நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தலைமையில் 500 போலீசார் பணியில் ஈடுபட்டனர். மேலும் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பதவி உயர்வு

போலீஸ்காரர்களாக பணியாற்றுபவர்கள் சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாகை சர் ஐசக்நியூட்டன் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் 618 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்