ஜருகு அருகே 26 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

ஜருகு அருகே 26 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-10-17 20:00 GMT

தர்மபுரி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தர்மபுரி மாவட்டம் ஜருகு செல்லும் வழியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சுமார் 50 கிலோ எடை கொண்ட 26 ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த மூட்டைகளில் இருந்த 1¼ டன் ேரஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்க திட்டமிடப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இளங்கோ (வயது 40) என்பவர் மீது தர்மபுரி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்