2,500 பாக்கெட் சாராயம், கார் பறிமுதல்

2,500 பாக்கெட் சாராயம், கார் பறிமுதல்

Update: 2023-01-11 18:45 GMT

திருவாரூர் மாவட்டம் பேரளம் - காரைக்கால் சாலையில் திருக்கொட்டாரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் இருந்து வந்த காரை போலீசார் மறிக்க முயன்றனர். இதனை பார்த்ததும் காரை வயலில் இறக்கி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் காரை சோதனை செய்தபோது, அதில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தி வந்த 2,500 பாக்கெட் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து, தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்