வேலைவாய்ப்பு முகாமில் 250 பேர் தேர்வு

தெள்ளாரில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 250 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2023-01-21 12:55 GMT

வந்தவாசி

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் ஆகியவை சார்பில் வந்தவாசியை அடுத்த தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் திறன் பயிற்சி மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

தெள்ளார் ஒன்றியக்குழுத் தலைவர் கமலாட்சி இளங்கோவன் தலைமை தாங்கினார். தெள்ளார் ஊராட்சி மன்ற தலைவர் ஜி.ஆனந்தன் முன்னிலை வகித்தார். மகளிர் திட்ட இயக்குனர் பா.அ.சையத் சுலைமான் முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

முகாமில் தனியார் தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்று நேர்காணலை நடத்தினர். இதில் 250 பேர் வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் திறன் பயிற்சி நிறுவன அதிகாரிகள் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி பெற 120 பேரை தேர்வு செய்தனர்.

முகாமில் உதவி திட்ட இயக்குனர்கள் சந்திரகுமார், ஜான்சன், வாழ்வாதார இயக்க வட்டார மேலாளர்கள் எஸ்.சாந்தி, முத்துக்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்