25 ஆயிரம் பேர் கலந்து கொள்ள ஏற்பாடு

சிவகாசியில் 29-ந் தேதி நடக்கும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். இதில் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

Update: 2022-09-26 18:48 GMT

சிவகாசி, 

சிவகாசியில் 29-ந் தேதி நடக்கும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். இதில் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

ஆலோசனை கூட்டம்

சிவகாசியில் வருகிற 29-ந் தேதி காலை 10 மணிக்கு விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். இதில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

இந்த பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்து சிவகாசி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி ஆலோசனை நடத்தினார். தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

25 ஆயிரம் பேர்

ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது, அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 29-ந் தேதி சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் அண்ணாமலையார் நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

இதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் இருந்தும் சுமார் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

பொதுமக்களும் பங்கேற்பு

கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் மட்டும் இன்றி பொதுமக்களும் அதிகளவில் கலந்து கொள்ள உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்