விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பந்தலூர்,
பந்தலூர் அருகே கொளப்பள்ளி பகுதியில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும் வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு புகார்கள் சென்றன. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின்படி, சேரம்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், தினேஷ்குமார் மற்றும் போலீசார் கொளப்பள்ளியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோ, ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் போக்குவத்து விதிமுறைகளை மீறி இயக்கப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.