மருந்து விற்பனை பிரதிநிதி வீட்டில் 25 பவுன் நகைகள் கொள்ளை

திருச்சி அருகே மருந்து விற்பனை பிரதிநிதி வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-04-04 14:28 GMT

திருச்சி அருகே மருந்து விற்பனை பிரதிநிதி வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மருந்து விற்பனை பிரதிநிதி

திருச்சியை அடுத்த நம்பர்-1 டோல்கேட் அருகே உள்ள பசுமை நகரை சேர்ந்தவர் குமரன் (வயது 50). இவர் திருச்சியில் உள்ள தனியார் மருந்து விற்பனை நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் குமரன் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவி வளர்மதியை (46) ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். நள்ளிரவு தம்பதி இருவரும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

25 பவுன் நகைகள் கொள்ளை

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த இரும்பு பீரோவின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும், அதில் வைத்திருந்த தங்க சங்கிலி, தோடு, மோதிரம், நெக்லஸ் மற்றும் வளையல் உள்பட 25 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம ஆசாமிகள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து குமரன் கொள்ளிடம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

வலைவீச்சு

போலீஸ் துப்பறியும் நாய் சம்பவம் நடந்த வீட்டில் மோப்பம் பிடித்துவிட்டு, அருகே உள்ள ரெயில் நிலையம் வரை ஓடிச்சென்று நின்றுவிட்டது, யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கொள்ளையர்கள் உடைத்த பீரோவில் பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்