கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் புகையிலை பொருட்கள் விற்ற, ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, கல்லாவி, பர்கூர், மத்தூர், கந்திகுப்பம், போச்சம்பள்ளி, பாரூர், நாகரசம்பட்டி, கிருஷ்ணகிரி, மகராஜகடை, ஓசூர், பாகலூர், பேரிகை, சூளகிரி, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 25 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3,100 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.