சீர்காழி சட்டநாதர் கோவிலில் மே 24-ந்தேதி குடமுழுக்கு

சீர்காழி சட்டநாதர் கோவிலில் மே 24-ந்தேதி குடமுழுக்கு நடைபெறும் என தருமபுரம் ஆதீனம் அ றிவித்துள்ளார்.

Update: 2023-04-09 18:49 GMT

திருவிடைமருதூர்:-

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் வந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-திருப்பணி நடைபெற்று வரும் பல்வேறு கோவில்களில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. அடுத்த மாதம் 24-ந்தேதி சீர்காழி சட்டநாதர் கோவில் குடமுழுக்கு நடைபெறுகிறது. குடமுழுக்கு 80 குண்டங்கள், 125 சிவாச்சாரியார்கள், 120 வேத பிராமணர்கள், ஆயிரம் அடியார்கள் திருமுறை விளக்கம், 5ஆயிரம் பெண்கள் பங்குபெறும் நாட்டிய நிகழ்ச்சியுடன் நடைபெறுகிறது. வருகிற ஜூலை 7-ந்தேதி திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடக்கிறது. இதை முன்னிட்டு திருப்பனந்தாளில் உள்ள ஊருடையப்பர், கிராம தேவதைகள், திருப்பனந்தாள் காசி மடத்தை சேர்ந்த வீரிஅம்மன் கோவில், காசி விஸ்வநாதர் கோவில்களில் 5-ந்தேதி மற்றும் 7-ந்தேதிகளில் குடமுழுக்கு நடக்கிறது. திருபுவனம் சரபேஸ்வரர் கோவிலில் தை மாதத்தில் குடமுழுக்கு நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்