தக்கலையில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிக்கு ரூ.24 ஆயிரம் அபராதம்

தக்கலையில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிக்கு ரூ.24 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-05-11 21:48 GMT

தக்கலை:

தக்கலை பழைய பஸ் நிலையத்தில் நேற்று தக்கலை போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றிகொண்டு கேரளாவுக்கு சென்றது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அந்த லாரிக்கு ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் இதுபோல் தொடர்ந்து அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிக்கொண்டு வந்தால் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்