விருதுநகரில் இந்து முன்னணியினர் 24 பேர் கைது
இந்து முன்னணியினர் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகரில் இந்து முன்னணியினர் மாவட்ட பொறுப்பாளர் பாலமுருகன் தலைமையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று தேசபந்து திடலில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் 24 இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.